கிழக்கு முனையம் மாத்திரமல்ல திருமலை எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிற்கு வழங்கவே அரசு முயற்சி  - சுனில் ஹந்துனெத்தி

Published By: Digital Desk 4

15 Dec, 2020 | 10:43 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது இத்துடன் நிறைவடையப் போவதில்லை. மாறாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட ஏனைய தேசிய சொத்துக்களும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

Articles Tagged Under: சுனில் ஹந்துனெத்தி | Virakesari.lk

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தனியார் மயப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கடனை செலுத்த மீள கடன் பெறும் நிலைமையே தற்போது நாட்டில் காணப்படுகிறது. இந்நிலையில் வெளிநாடுகளால் பலவந்தமாக தேசிய சொத்துக்களை விற்க வைப்பதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. 

இவ்வாறு தேசிய சொத்துக்கள் விற்கப்படுவதில் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் என்பனவே பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்.

ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் தேசிய சொத்துக்களை விற்கப் போவதில்லை என்று உறுதியளித்த அரசாங்கம் அதற்கேற்ப செயற்படாமல் மக்களின் கோரிக்கைக்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ள அமைச்சர் றோஹித அபேகுணவர்தண , கடனை மீள செலுத்த முடியாத நிலையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறிவித்தலொன்றையும் விடுத்துள்ளார்.

இந்தியாவின் 'அதானி 'என்ற நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு இதனை வழங்கினால் அது பொறுத்தமானதாகும். எனினும் குறித்த நிறுவனத்திற்கு வழங்குவது எவ்வாறு பொறுத்தமாகும்.

இந்த நடவடிக்கை இத்துடன் நிறைவடையப் போவதில்லை. திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் நிச்சயம் போராடுவோம். நாட்டு மக்களையும் எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27