யாழில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய  சந்தேக நபர் கைது 

Published By: Digital Desk 4

15 Dec, 2020 | 10:44 PM
image

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து தனுரொக் என்ற மானிப்பாய் இளைஞனை வாளால் வெட்டி கொலை முயற்சி செய்தமை, நீர்வேலியில் உள்ள தனுரொக்கின் நண்பனின் வீடு புகுந்து இளைஞனையும் தாயாரையும் தாக்கியமை கச்சேரியில் ஊழியர் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல வாள்வெட்டு வன்முறைகளுடன் பிரதான சந்தேக நபராக சுமன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

பணத்துக்காக வாள்வெட்டு வன்முறைகளின் தான் ஈடுபட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரால் யாழ்ப்பாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில் ஓமந்தையில் தலைமறைவாகியிருந்தமை தொலைபேசி உரையாடலின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார். அவர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05