(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் அல்லது தடுப்பூசி போன்றவை உரிய இரசாயனப்பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாந்துபுள்ளே வலியுறுத்தியிருக்கிறார்.
உலகலாவிய ரீதியில் கொவிட் - 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசியை எமது நாட்டில் பயன்படுத்துவது தொடர்பில் விசேட நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நோக்கில் சுகாதாரத்துறைசார் நிபுணர்களை இன்று செவ்வாய்கிழமை சுகாதார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியரால் பரிந்துரை செய்யப்படும் எந்தவொரு மருந்தோ அல்லது தடுப்பூசியோ மனிதரின் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அவற்றின் பக்கவிளைவுகள் குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
இதன்போது சர்வதேச மட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள கொவிட் - 19 தடுப்பு மருந்தின் செயற்திறனான தன்மை, அதனைப் பராமரிப்பதற்கான வெப்பநிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM