பொது மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இலங்கையின் விமான சேவை விஸ்தரிக்கப்படுவதோடு அபிவிருத்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களுக்கும் கொழும்பு “போர்ட் சிட்டி” (துறைமுக நகரத்துக்கிடையே) யையும் இணைக்கும் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநர்களின் 53 ஆவது மாநாடு இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.