இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 7 ஆம் வகுப்பு மாணவியொருவர் கரும்பு தோட்டத்தில்  கொன்று புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  குறித்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை பாடசாலை முடிந்ததும் தனது தாயுடன் வயலுக்கு சென்றுள்ளார் மாணவி உஷாராணி. அப்போது கோவில் அருகே சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்ததும் தான் இங்கு விளையாடுவதாகவும் நீங்கள் வயலுக்கு செல்லுமாறி கேட்டுக்கொண்டதிற்கு இணங்கிய தயார் உஷாராணியை அங்கு விட்டுவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். 

வயலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது உஷாராணி வீட்டுக்கு வராததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் பல இடங்களில் அவரை தேடியுள்ளார்.

நேற்று காலை கரும்பு தோட்டத்தில் உள்ள பள்ளத்தில் மண்மேடு இருப்பதை பார்த்த வயலுக்கு சென்றவர்கள் அதனை குச்சியால் கிண்டி பார்த்தபோது அதில் மாணவி உஷாராணி கொலை செய்யப்பட்டு புதைக்கப்படிருப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மாணவி உஷாராணி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.