சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொலிஸ் திணைக்களமே பொறுப்பு  - சட்டமா அதிபர்

Published By: Digital Desk 4

15 Dec, 2020 | 04:48 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்பில்லை. எமது  ஆலோசனையின் பிரகாரம் செயற்பட தவறிய பொலிஸ் திணைக்களமே  அதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என சட்டமா அதிபர் தப்புலத லிவேரா தெரிவித்தார்.

நீதிபதி கிஹான் பிலபிட்டியாவை உடன் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு! |  Virakesari.lk

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டடதொகுதி திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளில் இருக்கவேண்டிய சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கும் அதிக கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணாகவே சிறைச்சாலையில் கொரோனா தொற்று நிலைமை பாரியளவில் பரவவும் காரணமாகும் என தெரிவித்து, சிலர் எம்மை குற்றம் சாட்டினாலும் அதன் நிலைமைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்பில்லை.

மாறாக எனது ஆலாேசனையின் பிரகாரம்  நடவடிக்கை எடுப்பதற்கு முடியாமல்போன பொலிஸ் திணைக்களளமே அதற்கு பொறுப்பு கூறவேண்டும்.

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்காக, போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட சாதாரண குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல சந்தர்ப்பங்களில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலாேசனை வழங்கி இருந்தேன்.

நாட்டுக்கள் கொராேனா தொற்று பரவி இருந்த கடந்த ஏப்ரல் மாதம் மற்றும் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பமான பின்னரும் வழங்கியிருந்த ஆலோசனைகளை இதுவரை செயற்படுத்தவில்லை. 

கொரோனா தொற்று நாட்டுக்குள் பரவிக்கொண்டிருக்கும் நிலையிலும் தமது உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் கண்டுகொள்ளாது, கடமைகளை மேற்கொண்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவும் எமது அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். 

இவ்வாறான நிலையில் பொலிஸ் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களின் பலவீனம் காரணமாக எமது அதிகாரிகளின் முயற்சி பயனற்று போகின்றது.

பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெற்று தனது குடும்பத்தை நடத்திச்செல்லும் அனைத்து அரச ஊழியர்களதும் பிரதான கடமையாக இருக்கவேண்டியது, எந்தவகையான  தடைகள், நெருக்கடிகள் குறைபாடுகள் ஏற்பட்டாலும் பொது மக்களுக்காக உண்மையாக சேவை செய்வதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33