(க.பிரசன்னா)
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சீமெந்து கூட்டுத்தாபனத்தை பார்வையிட சென்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமானத்திற்கு பங்களிக்கக்கூடிய, தற்போது மூடப்பட்டுள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செழிப்பு, பார்வை கொள்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
750 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலொன்றினால் மூடப்பட்டது.
அத்துடன், தற்பொழுது இத் தொழிற்சாலையில் பல இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சரின் ஆலோசகர் சுனில் ஹெட்டியாராச்சி, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க உள்ளிட்ட குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன வளாகத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
சீமெந்து கூட்டுத்தாபனம் செயற்பட்ட காலத்தில் பணிபுரிந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM