தடை செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு போட்டி தடை விதிக்­கப்­பட்­டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரே­ரா­வுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தொலை­பே­சி­யூ­டாக கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

ஜனா­தி­பதி நேற்று பகல் குசல் ஜனித் பெரே­ரா­வுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

பிரச்­சி­னை­க­ளு­ட­னான நிலை­ மையை தவிர்த்துக் கொள்­வ­தற்கு தேவை­யான விட­யங்­களை தனிப்பட்ட ரீதியில் தான் ஆராய்ந்து பார்ப்­ப­தாக தெரி­வித்த ஜனா­தி­பதி,திற­மை­யான வீரர் என்ற அடிப்­ப­டையில் மீண்டும் கிரிக்கெட் போட்­டி­களில் குசல் ஜனித் பெரேராவை காண்பது மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.