இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்வது குறித்து ஆராய்வு

Published By: Digital Desk 3

15 Dec, 2020 | 03:47 PM
image

(நா.தனுஜா)

இலங்கை ஜனாதிபதியின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி அரசதரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார் என்று மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கான இறுதிக்கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவான மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கிறார்.

'இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி அரசதரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.

'இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட சவாலை எதிர்கொள்வதற்கு உதவும் விதமாகவுமே ஜனாதிபதி சோலியின் தீர்மானம் அமையும். அதுமாத்திரமன்றி தமது அன்பிற்குரியவர்கள் தகனம் செய்யப்படுவதனால் பெரும் கவலையடைந்துள்ள இலங்கைவாழ் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு இது ஆறுதல் அளிப்பதாகவும் அமையும்' என்று மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09