(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம். நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் மற்றும் மாகாண சபை  முறைமை இரத்து செய்யல் என அரசியல் மட்டத்தில்  பேசப்படுகிறது.

பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு  மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் அரசியல்  நோக்கங்களுக்காக மாகாண சபை முறைமை பலவீனப்படுத்தப்பட்டது.

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம்.  மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்று மாகாண சபை முறைமையை பலப்படுத்தும்.