பிரதமர் ஏன் விரைவில் மாகாணசபை தேர்தல்களை விரும்புகிறார்?

15 Dec, 2020 | 01:58 PM
image

சிறுபான்மைச் சமூகங்களுக்கு பெருமளவுக்கு அனுகூலமானதான பிரதிநிதித்தவ முறையொன்றை கொண்டுவருவதற்கான  முயற்சிகள் காரணமாக இலங்கையில் மாகாணசபைத்  தேர்தல்கள் பல வருடங்களாக நடத்தப்படவில்லை. ஆனால், அந்த தேர்தல்கள்  விரைவில் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும்  விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுவதே பெரும்பாலும் சாத்தியம். அதேவேளை, புதிய பிரதித்துவ முறையை ஒன்றை வகுப்பதற்கான முறையை வகுப்பதற்கு முயற்சிகளும் தொடரும்.

மாகாணசபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டுமென்று தான் விரும்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருக்கிறார். புதிய கலப்பு பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறைக்கு வர நீ்ணடகாலம் எடுக்குமானால் பழையதேர்தல்  விகிதாசார பிரதிநிதித்தவ முறையின்கீழ் நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராயுமமாறு அவர் கேட்டிருக்கிறார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அதற்கு இணங்கிக்கொண்டு புதிய முறையொன்றுக்கு பொருத்தமான மாற்றங்களை தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் செய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என்று பிரதமரிடம் ஆணைக்குழு கூறியது.அத்தகைய தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற சபாநாயகரிடம் ஏற்கெனவே கூறியிருப்பதாக பிரதமர் கூறினார்.அதேவேளை முனனாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்ததேசப்பிரிய  எல்லைநிர்ணயக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டிருகிறார்.ஆணைக்குழுவின் ஏனைய ஏனைய நிரநதரஉ்றுப்பினர்கள் ஜெயலத் ரவிி திசாநாயக மற்றும் பி .எச்.பி பிரேமசிறியுமாவர்.

மாகாணசபை தேர்தலுக்கான தேவை

தனது கட்சிக்கான இரண்டாம், மூன்றாம் மட்டத்தலைவர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் பயிற்சியளித்து வளர்த்தெடுக்கக்கூடிய நிறுவனங்களை உருவாக்கி செயற்படவைக்க வேண்டிய தேவையை நன்கு அனுபவப்படட அரசியல்வாதியான பிரதமர் ராஜபக்ச உணருகிறார். அத்தகைய தலைவர்களை உருவாக்கி வளர்க்கும் கட்டமைப்புகள்தான் மாகாணசபைகள்.இதன் காரணத்தினால்தான் 2020--2021 பட்ஜெட்டில் மாகாணசபைகள் அமைச்சுக்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்ததாக  பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதவியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் வளர்ந்து வரக்கூடிய வெறுப்பு பொதுஜன பெரமுன அரசாங்கத்தைச்  சீண்டுவதற்கு முன்னதாக விரைவாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவிட வேண்டுமென்பதில் பிரதமர் மிகவும் குறியாக இருக்கினறார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஏனைய பல நாடுகளையும் விட இலங்கை சிறப்பாக செயற்படுகின்ற அதேவேளை, அடுத்துவரும் மாதங்களில் நிலைவரம் எத்தகையதாக இருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. அதனால், நிலைவரம் நன்றாக இருக்கும்போது தேர்தல்களை நடத்த பொதுஜன பெரமுன விரும்புகிறது.பொருளாதார முன்மதிப்பின்படி  2021 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகள் தளர்ந்து பொருளாதாரம் மீண்டெழும். 2021 பொருளாதாரம் 3.4 சதவீதத்தால் வளரும் என்று எஎதிர்பார்க்கப்படுகிறது  ; கொவிட் --19 தொற்றுநோய்க்கான தடுப்பூசியும் சந்தைக்குள் பிரவேசிக்கக்கூடியதாக இருக்கும் ; இது பாருளாதாரத்தை ஊக்குவித்து வருமானத்தை உருவாக்கும்.எனவே 2021  முதல்காலாண்டு மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவதற்கு நல்லநேரமாகும்.

ஜனாசா அடக்க பிரச்சினை

மாகாணசபை தேர்தல்களை நடத்தும் எதிர்பார்ப்பில் தான் கொவிட்டுக்கு பலியாகும் முஸ்லிம்களின் .ஜனாசாக்களை தகனம் செய்வது தொடர்பான பிரச்சினையை தீர்த்துவைக்கும் முயற்சிகளில் பிரதமர் இறங்கியிருக்கிறார்.இந்த பிரச்சினைக்கு விரைவில் ஒரு தீர்வை வகுக்குமாறு அந்த நடைமுறைகளுக்கு  பொறுப்பான குழுவிடம் பிரதமர் கேட்டிருக்கிறார்.முஸ்லிம் சிறுபான்மையினரின்  உணர்வுகளை ஆசுவாசப்படுத்துவதே நோக்கம்.அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றறுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை அரசாங்கத்தினால் பெறக்கூடியதாக இருந்ததற்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கட்சிமாறி வாக்களித்ததே  காரணம் என்பதை  பிரதமர்  நன்கறிவார்.

எல்லைநிர்ணய பிரச்சினைகள்

முன்னர் கூறப்பட்டதைப் போன்று மாகாணசபைகள் தேர்தல் தாமதிக்கப்பட்டதற்கு தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட  பிரச்சினகைளே  காரணமாகும். சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஒரு நேர்மையான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக எல்லைநிர்ணயக் குழுவொன்று 2015 நவம்பரில் நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற சேவையாளர் நாயகம் கனகரத்தினம் தவலிங்கம்  தலைமையிலான ஐவர் கொண்ட குழுவில்  மத்திய வங்கியின் ஒய்வுபெற்ற உதவி ஆளுநர்  கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க, பேராசிரியர்களான எஸ்.எச்.ஹிஸ்புல்லா, சங்கர விஜயச்சந்திரன் மற்றும் ஓய்வுபெற்ற உதவி தேர்தல்கள் 

ஆணையாளர் பிரேமதிலக சிறிவர்தன ஆகியோர் உறுப்பினர்களாவர்

50 சதவீதமான உறுப்பினர்கள் பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறை  மூலமும்  எஞ்சிய 50 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதி்த்துவ அடிப்படையிலும் தெரிவாகுவர் என்று ஆணைக்குழு விதப்புரை செய்திருந்தது.ஆணைக்குழுவின் அறிக்கை தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் சிறுபான்மையினத்தவர்களின் பிரதிநிதித்துவம், பல உறுப்பினர் தொகுதிகள், தொகுதிகளுக்கு பெயரிடுதல்  மற்றும் போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை உட்பட பீரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்ட பெருவாரியான பிரச்சினைகளை அறிக்கை கையாண்டது.

ஆனால், 2018 ஆகஸ்டில் மாகாணங்களின் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை பாரராளுமன்றம் நிராகரித்தது.சபையில் பிரசன்னமாக இருந்த சகல உறுப்பினர்களும் எதிராகவே வாக்களித்தனர்.அறிக்கையை ஆதரித்த  ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் உட்பட 86 எம்.பி.க்கள் வாக்களிப்பு வேயைிலா சபையில் பிரசன்னமாக இருக்கவில்லை.சிறுபான்மைசமூகங்களின் அமைச்சர்களான மனோ கணேசனும் ரவூப் .ஹக்கீமும் அறிக்கை சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மீறிவிட்டதாக கண்டனம் செய்து எதிர்த்து வாக்களித்தனர்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் விகிதாசாரப்பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமாக இருக்கவேண்டும் என்று  அன்றைய பிரதமரும்  கூட்டு எதிரணியின் தலைவரான தினேஷ் குணவர்தனவும் கூறினர்.

பல்வேறு சமூகங்கள் மற்றும் நலன்நாடும் குழுக்களிடமிருந்து பெருவாரியான கோரிக்கைகள் வந்தது மாத்திமல்ல, அவை ஒன்றுடன் ஒன்று  முரண்படுகின்றவையாகவும் இருப்பதால் எல்லை நிர்ணயப்பணி மிகவும் கடுமையானதாக இருக்கிறது.பரந்து ஆங்காங்கே வாழ்கின்ற  சமூகங்கள் உட்பட சகல சமூகங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு பல்வேறு வகையான பிரதிநிதித்துவ முறைமைகளை எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்வைத்தது.ஆனால் அவற்றில் பல  ஆணைக்குழுவின் ஆணைக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன.

தோல்விகளுக்கு மத்தியிலும் செயற்பாடுகள் தொடரும்.ஆனால் வெற்றிபெறும் சாத்தியமில்லை.தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப்பிரதிநிதித்துவ தேர்தல் முறையை மேலும் கூடுதல் பிரதிநிதித்துவத்தை கொடுக்கக்கடியதாக மாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை இருப்பினும்  அந்த தேர்தல் முறை இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் போதுமான அளவுக்கு  சேவைசெய்திருக்கிறது என்பது பொதுவில் ஏற்றக்கொள்ளப்படுகிறது.( டெயிலி எக்ஸ்பிரஸ் )

பி.கே.பாலச்சந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11