மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் நான்கு வயதுடைய ஆண் குழந்தையொன் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடியை சேர்ந்த நான்கு வயதுடைய  சுரேஷ் தட்சயன் எனும் குழந்தையே இவ் விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

 

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் பேதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடியில் இருந்து களுதாவளையை நோக்கி  மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென துவிச்சக்கர வண்டியொன்று குறுக்கே சென்றுள்ளது. 

இதனையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்த எத்தணித்த வேளை சைக்கிளில் இருந்த குழந்தை கீழே தவறிவிழுந்துள்ளது. 

பின்னர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.