அனைத்து ஏ மற்றும் பீ தர பிரதான சாலைகள் மற்றும் சி, டீ தர மாகாண சாலைகளின் மேம்பாட்டு அபிவிருத்தி பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என கிராமப்புறசாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர்  நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 100,000 கி.மீ. கிராமப்புற வீதிகள் தேசிய அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டான தொகுதியில் வீதி மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகையில் ,

அனைத்து ஏ மற்றும் பீ தர பிரதான சாலைகள் அத்துடன் சி, டீ தர மாகாண சாலைகளின் மேம்பாட்டு அபிவிருத்தி பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின்படி 100,000 கி.மீ. கிராமப்புறசாலைகள் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதன்படி கட்டான மடவல அரம்பே சாலை, கட்டியல கமமெதசாலை, படபத்தல சமகி மாவத்த, ரத்தொழுகம  விளையாட்டரங்கு சுற்றுவட்ட வீதி ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த திட்டத்தின் கீழ் 3 கி.மீ தூரம் 43 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்படும்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட இரண்டாவது ஒருங்கிணைந்தசாலை முதலீட்டு திட்டத்தின் கீழ் கிம்புலப்பிட்டி வெரெல்ல சாலையின் அபிவிருத்தி பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 55 மில்லியன் ரூபாவாகும். இந்த சாலையின் நீளம் 1.67 கி.மீ. ஆகும் என்றார்.