முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 55 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்காக 1,445 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதேவேளை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 தனிமைப்படுத்தல் உத்தரவுகளை அமுல்படுத்துவதற்காக பொலிஸார் தொடர்ந்தும் தங்கள் கடமைகளை முன்னெடுப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.