மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ் வருடம் ஜுலை மாதம்  வரை 3070 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. 

இதன்படி கண்டி மாவட்டத்தில் 2290  டெங்கு நோயாளிகளும், நுவரெலியா மாவட்டத்தில் 259  நோயாளிகளும், மாத்தளை மாவட்டத்தில் 521 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.