மாகாண சபை முறைமை நாட்டிற்கு அவசியம் -  ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 4

15 Dec, 2020 | 12:09 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம். நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: ரோஹித அபேகுணவர்தன | Virakesari.lk

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் மற்றும் மாகாண சபை  முறைமை இரத்து செய்யல் என அரசியல் மட்டத்தில்  பேசப்படுகிறது.

பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு  மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் அரசியல்  நோக்கங்களுக்காக மாகாண சபை முறைமை பலவீனப்படுத்தப்பட்டது.

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம்.  மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்று மாகாண சபை முறைமையை பலப்படுத்தும்.

இறக்குமதி பொருளாதாரத்தை மட்டுப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிராமிய மக்களின் அபிப்ராயங்களுக்கு அமைய 2021 வரவு -செலவு திட்டம் உருவாக்கப்பட்டது." செயற்திட்டங்களுடன் மீண்டும் கிராமத்துக்கு" வேலைத்திட்டம் இம்மாதம் 25 ஆம் திகதியில் இருந்து ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை சுமார் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவு ஊடாக முன்னெடுக்கப்படும்.

 இச்செயற்திட்டம் ஊடாக கிராமிய  உற்பத்திகள் மேம்படுத்தப்படும். இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59