சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்து வெளியாகிய கபாலி படத்தின் டிரெய்லரில் இலங்கை அணியின் இளம் வீரர் குசல் மெண்டிஸின் படத்தை பொருத்தி வெளியாகியுள்ள காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவுஸ்திரேலியா அணிக்கெதிராக இடம்பெற்ற முதலவாது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது போட்டியிலேயே 176 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்ட  இளம் வீரர் குசல் மெண்டிஸ், ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

சிங்கள மொழியில் “ கோ குஷலா ” என்ற தலைப்பில் குறித்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதனை முகப்புத்தகத்தில் பதிவேற்றியவர் விநோதத்திற்காக உருக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.