2021 வரவு - செலவு திட்டம் மக்களுக்குரியதல்ல -  ஹர்ஷண ராஜகருணா

Published By: Digital Desk 4

14 Dec, 2020 | 07:33 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிலை இழந்துள்ளவர்களுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் எந்தவொரு நிவாரணத்தையும் வழங்காமல் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா |  Virakesari.lk

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாளொன்றுக்கு 500 - 600 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையானது நாட்டில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு எந்தளவிற்கு அபாய நிலையை அடைந்துள்ளது என்பது சுகாதாரத்துறையினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கூட கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. மாறாக அமைச்சர்கள் அனைவரும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக செயற்பாட்டு ரீதியில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகவும் தொழிலை இழந்துள்ளவர்களுக்காகவும் வரவு - செலவு திட்டத்தில் எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆனால் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளனர். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாமரை கோபுரம் மற்றும் தாமரை தடாகம் என்பவற்றை அமைத்தததைப் போன்று தற்போதும் அநாவசிய அபிவிருத்தி திட்டங்களே இந்த அரசாங்கத்திடம் உள்ளது. இவ்வாறான வேலைத்திட்டங்களுக்காக சுமார் 6000 ஏக்கர் வனப்பகுதி இந்த அரசாங்கத்தால் சீரழிக்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 13:18:48
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23