மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ரூபா 1000 சம்­பளம் பெற்றுத் தரு­வது வெறும் தேர்தல் வாக்­கு­று­தி­யாக காற்றில் பறக்­க­வி­டப்­படாது, இந்த நல்­லாட்­சியில் அதனைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என நேற்று முன்­தினம் சபையில் வலி­யு­றுத்­திய பிர­தி­ய­மைச்சர் டிலான் பெரேர, இன்­னமும் "வீடுகள்" என அழைக்­கப்­ப­டாத தோட்டத் தொழி­லா­ளர்­களின் "லயன் காம்­பரா" முறைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்­டு­மென்றும் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு – செலவுத் திட்­டத்தின் சுகா­தார அமைச்சு, தொழில் அமைச்சின் குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே பிர­தி­ய­மைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தேர்தல் காலத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை 1000 ரூபா­வாக உயர்த்­துவோம் என உறு­தி­மொ­ழி வழங்­கப்­பட்­டது.

அதனை வெறும் தேர்தல் உறு­தி­ மொ­ழி­யாக காற்றில் பறக்­க­வி­டாது. தொழி­லாளர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட வேண்டும்.

கம்­ப­னி­க­ளுடன் இணைந்தாவது இந்த நல்­லாட்­சி­யும் தொழி­லா­ளர்­க­ளுக்கு ரூபா 1000 சம்­பளம் வழங்க திட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும்.

அதே­வேளை, இன்றும் மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் வாழும் இடங்­களை வீடுகள் என அழைப்­ப­தில்லை. லயன் கம்­பராக்கள் என்றே அழைக்­கப்­ப­டு­கி­றது. அந்த நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும். அம் மக்கள் வாழ்வி­லும் "வீடுகள்" என அழைக்­கப்­படும் நிலை­மையை உரு­வாக்க வேண்டும்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­தரம் இன்னும் உயர்­வ­டை­ய­வில்லை. அம் மக்­க­ளும் இச் சமூ­கத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரப்­பட வேண்டும் என்­றார்.