கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டமையினால் கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி டிரினிட்டி கல்லூரி, தக்ஷிலா கல்லூரி மற்றும் கலைமகல் கல்லூரி என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுத்தல்களுக்கு அமைவாக கண்டி நகர எல்லையில் 42 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கப்படுவதற்கு பல ஆசிரியர் சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.