இலங்கை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதுவரை காலமும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த சித்ராங்கனி வகீஸ்வரா பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கையின் சிரேஸ்ட சிவில் அதிகாரிகளில் ஒருவரான பிரட்மன் வீரக்கோனின் புதல்வரே எசல வீரக்கோன் ஆவார்.

கொழும்பு றோயல் கல்லூரி, களனி பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பிசினஸ் கல்லூரி ஆகியவற்றில் இவர் கல்வி கற்றுள்ளார்.