சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

By T Yuwaraj

13 Dec, 2020 | 10:03 PM
image

(செ. தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று -சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான, கொஸ்லந்த, தணமல்வில, ஹொரவபொதானை, மாங்குளம், மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது கஞ்சா வைத்திருந்தமை, கஜ முத்து மற்றும் வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்தமை, அனுமதி பத்திரமின்றி மண் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right