(க.பிரசன்னா)
மதுபான போத்தல்கள் மூலம் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைப்பதற்காக கால் போத்தல் மதுபானங்களுக்கு குறைந்தபட்சம் 10 ரூபா வைப்புக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற வகையில் பிளாஸ்ரிக் மற்றும் கண்ணாடி போத்தல்கள் கழிவுகளாக அகற்றப்படுவது அதிகரித்து வருவதை குறைப்பதற்காகவும் நுகர்வோரை ஊக்கப்படுத்துவதற்காகவும் 185 மில்லிலீற்றர் மதுபானங்களுக்கு வைப்பு கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கு மதுபான நிறுவனங்களை கோரியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொறுப்பற்ற வகையில் வெற்று போத்தல்கள் கழிவுகளாக வெளியேற்றப்படுவதை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விலை நிர்ணய பொறிமுறையை அமுல்படுத்தவும் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் கால் போத்தல்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் 18 - 20 மில்லியன்; போத்தல்கள் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகவும் 60 வீதமான போத்தல்கள் மீள்சுழற்;சி செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அமைச்சின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மதுபான உற்பத்தி நிறுவனங்களும் விற்பனை முகவர்களும் இறுதி தீர்மானத்துக்கு வந்தவுடன் வைப்புக் கட்டணத்தை அறவிடும் பொறிமுறையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் எவ்வாறாயினும் வெற்று போத்தல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை மதுபான உற்பத்தி நிறுவனங்களும் விற்பனை முகவர்களும் முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நடைமுறைகளுக்கு உடன்படாவிட்டால் எதிர்காலத்தில் மதுபான உற்பத்திகளுக்கு கால் போத்தலை பயன்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM