(க.பிரசன்னா)
இலங்கையிலிருந்து சர்வதேச விமான சேவைகளை இம்மாதம் 26 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக விமான சேவைகளை முதலில் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 4 விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இலங்கையில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களின் விமான சேவையை போன்று நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைக்கும்.
இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையான கால அட்டவணை எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM