2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிபா கால்பந்தாட்ட விருதுகள் டிசம்பர் 17 ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) ஆண்டு தோறும் கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர், வீராங்கனை, பயிற்சியாளர்கள் என சிறந்தவர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. 

2020 ஆம் ஆண்டு விருதுக்கான இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி பிபா ஆண்கள் சிறந்த வீரர் விருது: ஜுவென்டஸின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்சிலோனாவின் லியோனல் மெஸ்சி மற்றும் பேயர்ன் முனிச்சின் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிபா சிறந்த ஆண்கள் கோல்கீப்பர் விருது: லிவர்பூலின் அலிசன் பெக்கர், பேயர்ன் முனிச்சின் மானுவல் நியூயர் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட்டின் ஜான் ஒப்லாக் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிபா ஆண்கள் பயிற்சியாளர் விருது: லிவர்பூலின் ஜூர்கன் க்ளோப், பேயர்ன் முனிச்சின் ஹன்சி பிளிக் மற்றும் லீட்ஸ் யுனைடெட்டின் மார்செலோ பீல்சா ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பிபா ஆண்கள் பயிற்சியாளர் விருது, லிவர்பூலின் ஜூர்கன் க்ளோப், பேயர்ன் முனிச்சின் ஹன்சி பிளிக் மற்றும் லீட்ஸ் யுனைடெட்டின் மார்செலோ பீல்சா ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சிறந்த பிபா மகளிர் வீராங்கனைகளுக்கான விருது: லூசி பிரவுன்ஸ் (இங்கிலாந்து / ஒலிம்பிக் லியோனாய்ஸ் / மான்செஸ்டர் சிட்டி டபிள்யூ எப் சி), பெர்னில்லே ஹார்டர் (டென்மார்க் / விஎப்எல் வொல்ப்ஸ்பர்க் / செல்சியா எப்சி பெண்கள்) மற்றும் வெண்டி ரெனார்ட் (பிரான்ஸ் / ஒலிம்பிக் லியோனாய்ஸ்) 

சிறந்த பிபா மகளிர் கோல்கீப்பர் விருது: சாரா பவுஹாடி (பிரான்ஸ் / ஒலிம்பிக் லியோனாய்ஸ்), கிறிஸ்டியன் எண்ட்லர் (சிலி / பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன்), அலிஸா நெய்ர் (அமெரிக்கா / சிகாகோ ரெட் ஸ்டார்ஸ்) 

சிறந்த பிபா மகளிர் பயிற்சியாளர்: எம்மா ஹேய்ஸ் (இங்கிலாந்து / செல்சியா எப்சி பெண்கள்), ஜீன்-லூக் வாஸூர் (பிரான்ஸ் / ஒலிம்பிக் லியோனாய்ஸ்), சரினா விக்மேன் (நெதர்லாந்து / டச்சு தேசிய அணி).