(செ.தேன்மொழி )

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான நடவடிக்கைகள் ஜனவரி முதல் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பிள்ளைகளின் பெற்றோர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சாதாரண தரப் பரீட்சை முடிவடையும் வரையில் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது.

இவர்களுக்கு மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னரே இடமாற்றம் வழங்கப்படும். பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இவர்களைத் தவிர ஏனையவர்களுக்கு வழமையைப் போன்றே  இடமாற்றம் வழங்கப்படும்.