நீதி அமைச்சினை உலக வர்த்தக மையத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை

Published By: Vishnu

13 Dec, 2020 | 11:35 AM
image

(க.பிரசன்னா)

நீதியமைச்சின் தற்போதைய கட்டிடத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தேவைகளுக்கு வழங்குவதற்காக, நீதியமைச்சினை உலக வர்த்தக மையத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நீதியமைச்சினால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய நீதியமைச்சின் கட்டிடம் கொழும்பு 14, ஹல்ப்ட்ஸ்டாரப் பகுதியில் அமைந்துள்ளது. நீதியமைச்சினை உலக வர்த்தக மையத்திற்கு இடமாற்றுவதற்கு இரண்டுவருட வாடகையாக 200 மில்லியன் ரூபா செலவளிக்கப்படவுள்ளது. 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் செயயற்பாடுகளுக்கு மேலதிக இடத்தினை வழங்குவதற்காகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு உலக வர்த்தக மையத்திலுள்ள 35,071 அடி பரப்புள்ள பகுதிக்கு மாற்றப்படவுள்ளது. இப்பகுதிக்கான முதல் ஆண்டு வாடகையாக வரிகளற்ற வகையில் 115,734,000 ரூபாவும் இரண்டாம் வருட வாடகையாக வரிகளற்ற வகையில் 121,205,376 ரூபாவும் செலுத்தப்படவுள்ளது.

எனினும் சேவைக் கட்டணங்கள் இவற்றில் உள்ளடக்கப்படவில்லை. அந்தவகையில் சேவை கட்டணங்களாக முதல் ஆண்டுக்கு 32,826,456 ரூபாவும் இரண்டாவது ஆண்டுக்கு 32,826,456 ரூபாவுமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக அலுவலக செலவுகளுக்காக வரிகளற்ற தொகையாக 17,100,000 ரூபாவும் இரண்டு திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புகளான 38,507,958 ரூபா மற்றும் 2,000,000 ரூபா உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு குறித்த கட்டிடத்தை வழங்குவதற்கும் நீதிபதிகளுக்கான தனியான நீதிமன்றங்களும் அறைகளும் தேவைப்படுவதால் இடமாற்றம் இடம்பெறுவதுடன் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலிருந்து நிதியமைச்சினை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டதால் நீதிச் சேவைகள் ஆணைக்குழு நீதியமைச்சுக்கு பரிந்துரைத்திருந்தது. தற்போது நீதியமைச்சு தற்காலிகமாகவே இடமாற்றப்படுவதாகவும் நீதியமைச்சுக்கான புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படுவதாகவும் நீதியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் பொருளாதார முன்னேற்றம்...

2026-07-18 05:41:32
news-image

எரிபொருள் விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டா...

2026-07-18 05:33:11
news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04