எல்.பி.எல். தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பம்!

By Vishnu

13 Dec, 2020 | 09:49 AM
image

மை 11 சர்க்கிள்: லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 தொடரின் ஆரம்ப போட்டிகள் அனைத்தும் நேற்று முன்தினம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் போலல்லாமல், முதல் அரையிறுதிப் போட்டி இன்றிரவு 7.00 மணிக்கும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை இரவு 7.00 மணிக்கும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு கிங்ஸ் அணியானது ஆரம்ப சுற்றில் எட்டு போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பதிவுசெய்து 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி ஆரம்ப சுற்றில் தான், எதிர்கொண்ட ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியது. எனினும் இக்கட்டான இரண்டு ஆட்டங்களில் வெற்றியை பதிவுசெய்து கண்டி டஸ்கர்ஸ் அணியை விரட்டியடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

குறிப்பாக பலமிக்க கொழும்பு அணியை இலகுவாக தோற்கடித்து தாம் ஒரு வலிமை மிக்க அணி என்பதையும் நிரூபித்தது.

கொழும்பு கிங்ஸ் அணியின் அணியில் உள்ள அனைவரும் சிறந்த வீரர்கள் ஆவர். அவர்களில் தினேஷ் சந்திமல் மற்றும் லாரி எவன்ஸ் ஆகியோர் வலுவான ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியவர்களாக உள்ளனர். 

இந்த இரண்டு முக்கிய ஆயுதங்களைத் தவிர, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஆஷான் பிரியஞ்சன், திக்ஷிலா டி சில்வா மற்றும் டேனியல் பெல் ஆகியோரையும் குறிப்பிடலாம்.

தம்புள்ளை வைக்கிங்ஸுக்கு எதிரான போட்டியில், கயஸ் அஹமட் அரைசதம் அடித்து அணியை கண்ணுக்கு தெரியாத வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

எனினும் தம்புள்ளை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது கொழும்பு அணியின் நம்பிக்கை வீரர் எவன்ஸ் உபாதைக்குள்ளானமையினால், இன்றைய ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரில் ஒரு சதம் அடித்த ஒரே துடுப்பாட்ட வீரர் எவன்ஸ், உபாதைக்குள்ளாகி களத்தில் இருந்து வெளியேறும்போது 24 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அவர் இப் போட்டியில் விளையாடவில்லை என்றால் கொழும்பு அணி பாரிய சவாலை எதிர் நோக்க நேரிடும்.

ஹெர்ஷல் கிப்ஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து கொழும்பு கிங்ஸின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் ரங்கனா ஹெரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டி குறித்து கொழும்பு கிங்ஸ் அணித் லைவர் அஞ்சலோ மெத்தியூஸ் கூறுகையில், போனஸ் புள்ளிகள் அட்டவணையில் முன்னிலையில் இருக்க முடிந்தாலும், நாளைய (இன்றைய) போட்டியில் தோல்வியடைந்தாலும் தங்கள் தொடரிலிருந்து விலக வேண்டியிருக்கும். 

இந்த போட்டி தனக்கும் எனது அணிக்கும் அதிக அழுத்தம் கொடுக்கும் என்று அவர் கூறினார்.

அத்துடன் ஒரு அரையிறுதியில் விளையாடுவது எந்த அணிக்கும் ஒரு பெரிய அழுத்தம். நாங்கள் ஆரம்ப சுற்றில் முதலிடத்துக்கு வந்து விட்டோம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. 

ஏனென்றால் முதல் சுற்றில் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் நாங்கள் வென்றோம், ஆனால் நாளை (இன்று) தோற்றால் நாங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும். நாளை (இன்று) நன்றாக விளையாடும் அணி நிச்சயம் வெல்லும். 

காலி அணியும் மிகச் சிறந்தது. அவற்றை ஒருபோதும் இலகுவாக எடை போட முடியாது. தனுஷ்கா குணதிலக மிக நன்றாக விளையாடுகிறார். அவர்களிடம் திறமையான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். எனவே, நாளைய (இன்றைய) போட்டியில் சிறப்பாக விளையாடுவேம் என்று நம்புகிறேன் என்றார்.

எல்.பி.எல். தொடரில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள அணியாக காலி கிளாடியேட்டர்ஸ் அணி தற்போது உள்ளது. தனுஷ்கா குணதிலக்கவின் தனிப்பட்ட திறமையின் கீழ் இறுதி நான்கு ஆட்டங்களில் அரையிறுதிக்கான வாய்ப்பினை தக்க வைத்த அணி என்றால் அது காலி தான். 

ஒட்டுமொத்த ஆட்டங்களில் தனுஷ்கா 8 போட்டிகளில் 462 ஓட்டங்களை எடுத்து முன்னணியில் உள்ளார். எனினும் அவர் நேற்றைய பயிற்சி அமர்வில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் அந்த நேரத்தை தனது உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக செலவிட்டதாக கூறப்படுகிறது.

தனுஷ்க குணதிலக்கவுடன் விக்கெட் காப்பாளர் அஸாம் கான், பானுக ராஜபக்ஷ, அசான் அலி ஆகியோரின் துடுப்பாட்டமும் அணிக்கு வலுச் சேர்க்கிறது.

பந்து வீச்சில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொஹம் அமீர் அணியின் மிகவும் பொறுப்பான பந்து வீச்சாளர் ஆவார். 

ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மற்றும் ஒரே பந்து வீச்சாளராக ஆன அமீர், வேகப்பந்து வீச்சாளரின் தாளத்தை தக்க வைத்துக் கொண்டார். 

லசித் மலிங்காவைப் போலவே பந்து வீசும் நுவான் துஷாரா, காலி அணிக்காக விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இறுதிப்போட்டியில் நுவான் துஷாராவுக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது, இருந்தபோதும் நேற்றைய பயிற்சியின்போது அவர் தனது பந்துவீச்சு பயிற்சியைத் தொடர்ந்தமையினால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த காலி அணித் தலைவர் பானுக ராஜபக்ஷ, 

போனஸ் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தைப் பிடித்த போதிலும், முதல் சுற்றில் நாங்கள் இழந்த ஐந்து ஆட்டங்களில் பலவற்றை வெல்ல தனது அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் தவறுகள் காரணமாக அந்த வாய்ப்புகள் அனைத்தையும் நாங்கள் தவறவிட்டோம் என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 உலகக்கிண்ண கிரிக்கெட்...

2022-09-30 16:35:17
news-image

வீதி பாதுகாப்பு உலகத் தொடர் இறுதிப்...

2022-09-30 13:46:59
news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13