இன்றைய காலங்களில் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் பால்ய காலத்தில் சரியாக உறங்காததே காரணம் என்று அண்மையில் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்த்த ஓஹியோ பல்கலைகழக விஞ்ஞானிகள்.

இவர்களின் ஆய்வின்படி பிறந்து 3 வயது முதல் 9 வயது வரையிலான குழந்தைகள் இரவில் சரியாக உறங்காதிருந்தாலோ அல்லது இயல்பை விட குறைவாக தூங்கியிருந்தாலோ அவர்கள் உடற்பருமன் நோய்க்கு ஆளாகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு குழந்தைகளையும், சிறார்களையும் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு முன் தூங்கிவிடவேண்டும் என்றும், 8 மணி முதல் 9 மணிதியாலம் வரை உறங்கவேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் சீக்கிரமாக படுக்கைக்கு செல்லும் குழந்தைகளுக்கு உடற்பருமன் தாக்குவதில்லை என்றும், இரவு நேரத்தில் தாமதமாக அதாவது 8 அல்லது 9 மணிக்கு உறங்கச் செல்லும் குழந்தைகள் உடற்பருமனுக்கு ஆளாகிறார்கள் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மிகவும் இளம் வயதிலேயே நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற குறைபாடுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

எனவே உங்களுடைய குழந்தைகள் மற்றும் சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றால். பெற்றோர்களாகிய நாம் அனைவரும் அவர்களின் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

டொக்டர். எஸ் அசோக், M.S.,

தொகுப்பு அனுஷா

தகவல் : சென்னை அலுவலகம்