ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகுவதாக அறிவித்துள்ளார். 

அத்தோடு, குறித்த கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ளமை குறிப்பிடதக்கது. 

மேலும், ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.