Published by T. Saranya on 2020-12-12 12:56:10
அபுதாபியில் நடந்த கார் பந்தயத்தில் இடம் பெற்ற தீ விபத்தில் முன்னாள் உலக சாம்பியன் கிமி ரெய்க்கோனன் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பியுள்ளார்.

பார்முலா ஒன் கார் பந்தயங்கள் தற்போது அபுதாபியில் நடந்து வருகின்றன. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான கிமி ரெய்கோனன் அசுர வேகத்தில் ஓட்டிச் சென்ற போது காரின் பின்பக்கத்தில் தீப்பிடித்துள்ளது.

இதனைக் கண்ட கிமி ரெய்கோனன் சாமர்த்தியமாக பந்தயப் பாதையிலிருந்து விலகி காரினை ஓட்டிச் சென்று நிறுத்தினார். தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்த காரிலிருந்து வெளியேறி உயிர் தப்பினார்.

இந்நிலையில்,சில வாரங்களுக்குப் முன்பு இடம் பெற்ற பங்கரமான கார் தீ விபத்திலிருந்து ரொமெய்ன் க்ரொஸ்ஜீன் என்பவர் உயிர்தப்பியமை குறிப்பிடத்தக்கது.