தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி ஆகிய தொடர் வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் தற்போது வாஸ்கோடகாமா என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக மகேஷ் பாபு நடிக்க, நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவருடன் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா, நதியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்காக முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பொலிவூட் நடிகையான ப்ரணீதி சோப்ரா. இவருக்காக இந்திய மதிப்பில் 3.5 கோடி ரூபாய் ஊதியமாக தரவும் ஒப்புகொள்ளப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் அவர் நடிக்க இயலாமல் போய்விட்டது. இந்நிலையில் படக்குழுவினர் உடனடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜானவி கபூரை நாயகியாக அறிமுகப்படுத்துவதற்காக அவரது தாயாரான ஸ்ரீதேவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அவர் ஜானவி தற்போது லொஸ்ஏஞ்சல்ஸ் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில் பயின்று வருகிறார். அதனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.
ஆனால் விசாரிக்கும்போது, மகேஷ்பாபுவை விட பெரிய ஹீரோவின் ஜோடியாகத்தான் ஜானவி அறிமுகமாகவேண்டும் என்று விரும்புகிறாராம் ஸ்ரீதேவி. ஒரு வேளை ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோக்களை மனதில் வைத்து இதனை சொல்லியிருப்பாரோ.. என எண்ணத் தோன்றுகிறது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM