ஆலய மணியின் கயிறு கழுத்தில் இறுகி 7 வயது சிறுவன் உயிரிழப்பு

By T Yuwaraj

11 Dec, 2020 | 06:09 PM
image

டிக்கோயா டங்கல் தோட்ட மேற்பிரிவில் உள்ள ஆலயத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் குறித்த  ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆலய மணியின் கயிற்றில் கழுத்து பகுதி இறுகியதால் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் அந்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆலய மணி கயிற்றில் கழுத்து பகுதி இறுகியதால் மரணித்துள்ளதாக தெரியவருகின்றது.

சிறுவனின் சடலம் மஸ்கெலியா, மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையை மஸ்கெலியா, மாவட்ட வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நரசிம்ம பெருமாள் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் குறித்த சிறுவனின் தந்தை, தாய் பணிக்கு சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நோர்வுட் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும்...

2022-10-04 21:19:45
news-image

சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு...

2022-10-04 17:24:10
news-image

செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதே அடுத்த...

2022-10-04 17:27:00
news-image

நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் :...

2022-10-04 16:12:22
news-image

அர்ஜுன மகேந்திரனுடன் பகலுணவை உட்கொள்ளவில்லை :...

2022-10-04 17:28:36
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15...

2022-10-04 16:55:46
news-image

சட்டவிரோத இழுவை வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடி...

2022-10-04 21:21:17
news-image

எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது -...

2022-10-04 16:24:19
news-image

ஜனாதிபதியிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடபகுதி கடற்தொழிலாளர்...

2022-10-04 21:12:59
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்க...

2022-10-04 16:04:04
news-image

தலைமைப் பதவி : முட்டாள் யார்...

2022-10-04 21:11:35
news-image

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து நிதி...

2022-10-04 15:50:33