ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் லங்கா ஜயவர்தன இன்று (01) பிறப்பித்துள்ளார்.

குறித்த 11 பேரும் நீதிமன்ற உத்ததரவினை மீறி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்துமை குறிப்பிடத்தக்கது.