இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இராகலை புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 ரவைகள் மற்றும் கற்களை உடைக்க பயன்படுத்தும் 12 வெடிகுண்டுகளுடன் மூன்று சந்தேக நபர்களை இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இராகலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு கார் ஒன்றில் நேற்று 10.12.2020 இரவு சந்தேக நபர்கள் சென்றுக் கொண்டிருந்த வேளையில் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்படி காரை இராகலை புரூக்சைட் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து சோதனை செய்யும் பொழுது இவைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இராகலை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இராகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM