இளம் பெண்ணொருவர் குளிக்கும் போது மறைந்திருந்து அதனை வீடியோ எடுத்த 15 வயது சிறுவனொருவன் குறித்த பெண்ணின் தாயிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தனது மகள் தினமும் குளிக்கும் போது குறித்த சிறுவன் வீடியோ பதிவு செய்வதை அறிந்த பெண்ணின் தாயார், மகளை குளிக்கமாறு கூறிவிட்டு மறைந்திருந்து அவதானித்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் இனந்தெரியாத நபரொருவர், நீர் தாங்கிற்கு செல்லும் நீர் குழாயின் வழியாக மேல் ஏறி குளியலறை ஜன்னலின் ஊடாக பெண் குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

சம்பவ நேரம் பார்த்து பெண்ணின் தாயார் அவ்விடத்திற்கு வர வீடியோ பதிவினை மேற்கொண்ட அந்த நபர் கையும் களவுமாக தாயிடம் மாட்டிக் கொண்டார்.

குறித்த நபரை தாயார், நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த சந்தேக  நபரின் உளவியல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.