பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

34 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சிவகுமார் என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில், துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டது.

குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்துவந்துள்ளதாகவும் தெரியவருகிறது.