நடிகர் ஸ்ரீகாந்தின் 'எக்கோ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By Gayathri

10 Dec, 2020 | 04:29 PM
image

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் 'எக்கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஆர்யா தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ' எக்கோ'. 

இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் ஆஷிஷ் வித்யார்த்தி, பூஜா ஜாவேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு,  ஜோன் பீற்றர் இசை அமைத்திருக்கிறார்.

ஒலியை மையப்படுத்தி உளவியல் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right