(க.பிரசன்னா)
மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு உறவினர்கள் உரையாடுவதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தொலைபேசி சேவையினை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் கைதிகளின் நலன் தொடர்பில் உறவினர்கள் அறிந்து கொள்வதற்காகவும் சிறைச்சாலைகளுக்கு முன்பாக பொதுமக்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்வதற்கும் வசதியாக இத்தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாடு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

0112678600 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணி நேரமும் குறித்த சேவையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அண்மைய மஹர சிறைச்சாலை கலவரத்தில் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் அழைப்பை ஏற்படுத்தி விசாரித்துக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுளன. இதற்காக சிறை அதிகாரிகள் குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.