"எங்கே..எங்கே..உறவுகள் எங்கே?,வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்!": முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: J.G.Stephan

10 Dec, 2020 | 03:02 PM
image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது 1,373 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றைய பன்னாட்டு மனித உரிமை நாளில், தமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவிப்பதாக தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில்,  மனித உரிமைகள் நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீதியில் நாம், குற்றம் செய்பவர்களுக்கு  யாரும் உடந்தையாக இருக்காதீர்கள் ,கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாறும், "எங்கே எங்கே உறவுகள் எங்கே , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்"  என பல கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தினுடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவராம் படுகொலை – லலித் குகன்...

2024-10-12 20:46:25
news-image

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக்...

2024-10-12 18:21:05
news-image

வீதியில் விழுந்து கிடந்த நபர் கார்...

2024-10-12 20:48:06
news-image

கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து;...

2024-10-12 18:20:35
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்...

2024-10-12 18:33:39
news-image

ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே...

2024-10-12 18:07:05
news-image

அத்தனகலு ஓயா, உறுவல் ஓயாவைச் சூழவுள்ள...

2024-10-12 17:20:26
news-image

மன்னார் குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம்...

2024-10-12 16:56:16
news-image

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை,...

2024-10-12 16:52:49
news-image

மட்டு. போதனா வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை...

2024-10-12 17:09:25
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

2024-10-12 16:41:57
news-image

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு...

2024-10-12 16:41:28