காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடுதில் பல கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களையும் பல ஊழியர்களையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த விடுதியையும் கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.