மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகவிருக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

'நானும் ரவுடி தான்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.  

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதல் தேவதை சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கும் இப்படத்திற்கு கோபி பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மற்றும் நயன்தாராவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 

இதனிடையே இப்படத்திலிருந்து நடிகை சமந்தா விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இவை படக்குழுவினர் சார்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.