நாட்டில் ஏற்பட்ட விபத்துக்களில் ஐவர் பலி

Published By: Gayathri

10 Dec, 2020 | 03:31 PM
image

(செ .தேன்மொழி)

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட ஐவர்  உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொக்கரெல்ல

கொக்கரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தள தல்கொடபிட்டி வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது, அவை ஒன்றுடன் ஒன்று மோதி எதிரே வந்த லொறியொன்றுடன் மோதியுள்ளன.

இவ் விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் படுகாயமடைந்த நிலையில் ரிதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்போது, ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொடம்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆணைமடு

ஆணைமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைமடு - சிலாபம் வீதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பிறிதொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர் திசையில் வந்த சிறிய ரக வாகனத்துடன் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 53 வயதுக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் சிறியரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ் - கண்டி பிரதான வீதியில் சிறு பிள்ளைகள் இருவர் உட்பட ஐந்துபேர் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த , வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கார் சாரதி உட்பட காரில் பயணித்த இரு பிள்ளைகளும், பெண்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட போது ஐந்து வயதுடைய பிள்ளை ஒன்றும், 30 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.  விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46