காலி கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி முதலிடம் பிடித்த தம்புள்ளை

By Vishnu

10 Dec, 2020 | 10:03 AM
image

மை 11 சர்க்கிள்: லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி காலி‍ கிளாடியேட்டர்ஸ் அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 17 ஆவது போட்டி நேற்றிரவு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை குவித்தது.

காலி அணி சார்பில் அசேல குணதிலக்க 46 ஓட்டங்களையும், செஹான் ஜெயசூரிய 39 ஓட்டங்களையும், தனஞ்சய லக்ஷான் 23 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

தனுஷ்க குணதிலக்க இப் போட்டியில் பெற்றுக் கொண்ட ஓட்டத்துடன் தொடரில் அவரின் மொத்த ஓட்ட எண்ணிக்கையானது 368 ஆக உயர்வடைந்துள்ளது.

பந்து வீச்சில் தம்புள்ளை அணி சார்பில் கசூன் ராஜித, ரமேஸ் மெண்டீஸ் மற்றும் தசூன் சானக்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், தில்ஷான் மதுசங்க ஒரு விக்கெட்னையும் வீழ்த்தினார்கள்.

169 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணியானது 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது

அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 38 ஓட்டங்களையும், அஞ்சலோ பெரேரா 45 ஓட்டங்களையும், சின்வாரி 46 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வழிவகுத்த சின்வாரி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அணி தொடரில் ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்து 11 புள்ளிகளுடன் முதலிடத்திக்கு முன்னேறியுள்ளதுடன், தம்புள்ளை அணியின் அரையிறுதிக் கனவும் மங்கிப் போனது.

இதேவேளை லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் சோயிப் மாலிக் 44 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

பந்து வீச்சில் கண்டி அணி சார்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், ஸ்டய்ன், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

150 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கண்டி அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

அணி சார்பில் குசல் பெரேரா 42 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 52 ஓட்டங்களையும், இர்பான் பதான் 22 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 52 ஓட்டங்களையும், இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசேல குணரத்ன தெரிவானார்.

கண்டி அணியின் இந்த வெற்றியானது ஏழு ஆட்டங்களில் பெற்ற இரண்டாவது வெற்றியாகும்.

எல்.பி.எல். தொடரில் இன்றைய தினம் இரு அட்டங்கள் இடம்பெறவுள்ளன.‍ பிற்பகல் 3.30 மணிக்கு ஆர்மபமாகும் தொடரின் 18 ஆவது போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும், இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் தொடரின் 19 ஆவது போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியும், கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதவுள்ளன,

கண்டி மற்றும் காலி அணிகளுக்கிடையிலான போட்டியானது தீர்க்கமான ஒன்றாக காணப்படுகிறது. காரணம் இப் போட்டியில் கண்டி அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு நான்காவது அணியாக காலடி எடுத்து வைக்கும்.

அதேநேரம் காலி அணி வெற்றி பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் அணி அரையிறுதிக்குள் நுழையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15