(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதிக்கு தேவையான முறையில் நீதிமன்ற தீர்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றங்களின் தீர்ப்பு சுயாதீனமாக இடம்பெறுவதில்லை என்ற உணர்வு இளைஞர்களுக்கு ஏற்பட்டால் அது வேறுவிதமாக பிரதிபலிக்கும் ஆபத்து இருக்கின்றது.

அதனால் நீதிமன்ற தீர்ப்புகளை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.