டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகினார் வோர்னர்

Published By: Vishnu

09 Dec, 2020 | 11:47 AM
image

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், அடிலெய்டில் இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாவுள்ள முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

எனினும் வோர்னர் மெல்போர்னில் ஆரம்பாகும் இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணியும் (2:1), இருபதுக்கு : 20 தொடரை இந்திய அணியும் (2:1) கைப்பற்றியுள்ளன.

இந் நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடுகையில் வோர்னர், பந்தை விழுந்து தடுத்த போதே உபாதைக்கு உள்ளாகி ஆடுகளத்திலிருந்து வெளியேறினார். 

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபதை குணமடையாமையின் காரணமாக எஞ்சிய ஒரு ஒருநாள் ‍போட்டியிலும், அடுத்த இருபதுக்கு : 20 தொடரிலும் வோர்னர் விளையாடவில்‍லை.

தற்போது சிட்னியில் சிகிச்சை பெற்று வரும் வோர்னர், அடுத்து வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியிருப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், வோர்னர் இன்று இருக்கும் இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது உடல் தகுதி அபாரமானது. எனவே அவர் பூரண குணமடைந்து மெல்போர்னில் வரும் 26 ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41