(எம்.மனோசித்ரா)
பாடசாலைகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புகையிலை மற்றும் மதுபான விற்பனை என்பவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது,
புகையில் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை அதிகாரிகளால் , உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் தேசிய செயற்திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு புகையிலை மற்றும் மதுபான பாவனை குறித்த உலகலாவிய ரீதியிலான மதிப்பீட்டுக்கு அமைய இலங்கையில் 10 வயதிற்கு அதிக ஆண் பிள்ளைகளில் நூற்றுக்கு 15.2 சதவீதமானவர்கள் புகையிலை பாவனையால் ஏதேனுமொரு வகையிலான உற்பத்திகளை பாவிப்பதாகவும் , 5.5 சதவீதமானவர்கள் மதுபானம் பாவிப்பதாகவும் , இந்த நிலைமை தற்போது மேலும் அதிகரித்துள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.
அனைத்து பாடசாலை மாணவர்களின் நலனையும் கருத்திற் கொண்டும் , சமூகத்தில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்குமான தேசிய தேவை , புகையிலை மற்றும் மதுபானம் என்பவற்றுக்கு எதிரான விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகள் குறித்து இதன் போது சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார். இதேவேளை பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்ற திட்டமிடப்பட்ட போதைப்பொருள் வியாபாரம் குறித்து இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை உள்ளிட்ட பொறுப்புடைய துறைகள் ஒன்றிணைந்து பாடசாலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் போதைப் பொருன் பாவனையைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் இனக்கம் காணப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM