மஹர சிறைக் களேபரம்: நிபுணர் குழு முன்னிலையில் மரணித்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனைகள்

Published By: Vishnu

09 Dec, 2020 | 07:32 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தின் போது உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையை நிபுணர் குழாம் முன்னிலையில் மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களமும் பாதிக்கப்பட்டோர் தரப்பினரும் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தின் போது உயிரிழந்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனையை மூன்று சட்ட வைத்திய அதிகாரிகள், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் துப்பாக்கிகள் தொடர்பான நிபுணர் ஒருவர், தடயவியல் ஆய்வு நிலையத்தின் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட நிபுணர் குழாம் முன்னிலையில் மேற்கொள்ள இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த நிபுணர்களின் பெயர் பட்டியலை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

எனினும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டவாதியான,  சட்ட மா அதிபரின் ஊடக இணைப்பு அதிகாரியான நிஷாரா ஜயரத்ன  தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்திற்கு அமைய இந்த வழக்கு விசாரணை  நேற்று மாலை இடம்பெற்றது. 

இதன்போது அரச சட்டவாதி நிஷார ஜயரத்ன மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகள் தொடர்பிலான குழுவினரின் சட்டத்தரணிகள் மன்றில் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04