யார் அரசாங்கம் அமைத்தாலும் பெருந்தோட்டங்களின் அபிவிருத்திக்காக கலந்துரையாடத் தயார் - வீ.ராதாகிருஷ்ணன் 

Published By: Digital Desk 4

08 Dec, 2020 | 08:17 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

யார் அரசாங்கம் அமைத்தாலும் அவர்களுடன் கலந்துரையாடி தோட்ட பிரதேச அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்க காலத்தில் பெருந்தோட்டங்களுக்கு எம்மால் முடியுமான அபிவிருத்திகளை மேற்கொண்டதால் தான் மக்கள் எம்மை மீண்டும் இந்த சபைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாங்கள் தோட்டங்களுக்கு எதனையும் செய்யவில்லை என அரச தரப்பில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் செய்த சேவைகள் அந்த மக்களுக்கு தெரியும். அதனால்தான் அந்த மக்கள் எங்களுக்கு நன்றிக்கடனாக தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் 6பேரை மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பி இருக்கின்றனர். நாங்கள் பெருந்தோட்டங்களுக்கு சேவை செய்யவில்லை என்றால் தேர்தலில் தெரிவாகி இருக்கமாட்டோம்.

அத்துடன் பெருந்தோட்டங்களில் பல பாதைகளை அமைப்பதற்கு நாங்கள் முன்னிருந்து அடிக்கல்களை நாட்டி இருக்கின்றோம். இன்னும் பல வேலைத்திட்டங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன. அவற்றை இந்த அரசாங்கத்தில் இருந்து எங்களுக்கு பெறுக்கொள்ள முடியுமான பங்குகளை பெற்றுக்கொண்டு தோட்டங்களின் அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுப்போம். யார் அரசாங்கம் செய்தாலும் அவர்களுடன் கலந்துரையாடி எமது பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

மேலும்  ஹட்டன் நோர்வூட் பாடசாலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருக்கின்றது. இந்த பாடசாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பாடசாலையை மாத்திரம் மூடி இதனை கட்டுப்படுத்துவது சாத்தியமாகாது என நினைக்கின்றேன். ஏனெனில் இந்த பாடசாலையில் படிக்கும் சகோதரர்கள் வேறு பாடசாலைகளுக்கு செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேபோன்று அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அல்லது வேறு யாரும் வேறு பாடசாலைகளுக்கு செல்பவர்களாக இருக்கலாம். 

அதனால் ஹட்டன் கல்வி வலயத்தில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மூடிவிடவேண்டும். அதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியுமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22