நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக அவரது மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அப்பாவுக்கு அண்மையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருந்தாலும் அவர் திறமையான மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் கூடுதல் தகவல்களை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்திருக்கிறார்.

இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.